Shoaib Malik இன் மீண்டும் ஒரு ருத்ர தாண்டவம்!!

 

2000'களில் கிரிக்கெட்டை சுவாசித்த வர்களுக்கு பிடித்தமான பல வீரர்களில் பாகிஸ்தானின் Shoaib Malik உம் ஒருவர்!!

Lower Middle Order இல் இறங்கி, மறுபக்கம் Wickets விழுந்தாலும் தனியாக நின்று சம்பவம் செய்யும் சாகசக்காரன்!!

39 வயசானாலும் அழகிய Shots உம், Stylish Sixes உம் தன் கையை விட்டுப் போகல'னு இன்று Scotland இற்கு எதிரான போட்டியில் காட்டிட்டார் Malik!!


முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானின் 15 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் Hafeez ஆட்டமிழக்க, SCORE 112/3.. 

அடுத்ததாக Latest Sensation அதிரடி சம்பவக்காரன் Asif Ali களமிறங்குவாரென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு,

Malik களமிறங்கியதில் சற்று ஏமாற்றம்!!


Single run உம் Double run உம் ஆக Malik அடிக்க, ரசிகர்களின் பொறுமைக்கு சோதனை.....


இடையில் ஒரு Sixer அடித்த போதும் Asif Ali யையே கண்கள் Zoom பண்ணிக்கொண்டிருந்தன!!


சிறப்பாக துடுப்பாட்டிய Baber Azam 17 ஆவது ஓவரில் 3 ஆம் பந்தில் ஆட்டமிழக்க 

Score 142/3 (17.3 Overs)


Malik 13 (7b)


அடுத்து Asif Ali உறுமிக்கொண்டு களமிறங்கினார்!!!


Malik இரண்டிரண்டு ஓட்டங்களாக ஓடிக்கொண்டிருக்க Asif Ali இற்கு சரியாக Strike கிடைக்கவில்லை!


19 ஆம் ஓவரும் வீசப்படுகிறது. 


முதல் பந்தில் Asif Ali - On strike....


Asif.... Asif.... Asif......

ரசிகர்களின் பெரும் ஆரவாரம்...


முதல் பந்தில் Single ஒன்றே Asif Ali இனால் அடிக்க முடிந்தது! 


2 ஆம் பந்தில் 2 runs அடித்த Malik....

3 ஆம் பந்தை தூக்கி அடிக்க Sania Mirza வின் முகத்தில் 1000 volts வெளிச்சம்!


Deep Mid wicket இற்கு மேலால் பந்து பறக்க ஒரு Sixer .....


4 ஆம் பந்தில் 1 run..

சிறப்பாக எறியப்பட்ட 5 ஆம் பந்தில் Asif Ali இன்னொரு Single... 

கடைசி பந்தில் Sania Mirza முகத்தில் மீண்டும் ஒரு வெளிச்சம்...

Superb timing இல் அடிக்கப்பட... 

Long on இல் ஓர் Flat Six....

32 (14b)

Score 163/4

கடைசி ஓவரில் மீண்டும் On strike இல் Asif Ali....

சிறப்பாக வீசப்பட்ட முதலிரு பந்துகளில் 2 run, 1run....

Malik on strike.....

3 ஆம் பந்து...

சுழன்று வந்த பந்தை Back Foot இல் ஓங்கி அடிக்க 

Backward Square Leg இல் இமாலய Sixer!!


4 ஆம் பந்தில்....

Pull Shot ஒன்று அடிக்க ஓடி வந்த Fielder இற்கு Hi சொல்லி விட்டு ஓடியது பந்து...

4 runs

5 ஆம் பந்து.... 

இறங்கி வந்து தூக்கி அடிக்க பெவிலியன் நோக்கி பறக்குது பந்து....

ஆமா.... அந்த பக்கம் Asif Ali என்று ஒராள் இருந்தாரே...

அவர மறந்திடுற அளவுக்கு ஆட்டம் வேற லெவல் ...

வெறித்தனம்!!

Malik 48* (17b)

Last ball இற்கு என்ன நடக்க போகிறது என்று பார்க்க ஆர்வம் அதிகரிக்கிறது...

Short ball....

Back foot இல் Malik...

Ball இடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே ஓங்கி ஒரு அடி.....

Mid Wicket பகுதியில் மேலே ஏறுது பந்து... 

Fielders ஐத் தாண்டி பெவிலியனில் சரணடைகிறது.....


இமாலய Sixer....

Half Century அடிக்கிறார் Malik... 18 பந்துகளில்!!

Fastest Half Century of T20 WORLD CUP 2021!!

சிறப்பான... தரமான... சம்பவம்!!!

பழைய Malik இன் ஆட்டங்களை கண்முன்னே கொண்டு வந்து,

புதியோருக்கு Malik'னா யாருன்'னு சொல்லிப்புட்டான்!!!

Semi-final இல் சம்பவங்களை எதிர்பார்க்க வெச்சுட்டியே தல!!!!

Form is temporary, Class is permanent!

Ifham Aslam

07.11.2021

Comments

Popular posts from this blog

Real Madrid Vs PSG: Champions League (R - 16) வேற லெவல் Match!